செய்திகள்

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பாக எம்.பிக்கள் பலர் கைதாவர்

அம்பாந்தோட்டையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக எம்.பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 10 பேரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.
நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் பின்னணியில் நின்று செயற்பட்ட எம்.பிக்களே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாமல் , டலஸ் மற்றும் கம்மன்பில ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது -(3)