செய்திகள்

பயங்கரவாத தடை சட்ட திருத்தம் தொடர்பாக கொள்கைகள் மற்றும் சட்ட கட்டமைப்பு

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்ட கட்டமைப்பினை தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை செயற்குழுவின் சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைப்பதற்கும் மற்றும் அச்சட்ட கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான சட்ட வரைபொன்றை தயாரிக்கும பணியினை ஆரம்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட ‘கொள்கைகள் மற்றும் சட்ட கட்டமைப்பினை’, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறை மேற்பார்வை செயற்குழுவின் சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்காக அதன் செயற்குழுவுக்கு முன்வைப்பதற்கும், அச்சட்ட கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான சட்ட வரைபொன்றை தயாரிக்கும் பணியினை ஆரம்பிப்பது தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)