செய்திகள்

இலங்கைக்கு மீண்டும் கிடைத்த GSP+ வரிச்சலுகை

இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொடுக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்குப் பதிலாக இலங்கை மனித உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு நல்லாட்சி உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சர்வதேச உடன்படிக்கைகளை அங்கீகரித்து அமுலாக்க வேண்டுமென ஆணைக்குழுவின் வர்த்தக ஆணையாளர் சிசிலியா மெல்ஸ்ரோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உற்பத்திகள் மீது விதிக்கப்படும் எஞ்சிய இறக்குமதி தீர்வைகளில் கணிசமாக பகுதியை நீக்க வேண்டுமென்பது ஆணைக்குழுவின் பரிந்துரையாக அமைந்துள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் ஜிஎஸ்பி வரிச்சலுகை நீக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களை கருத்தில் கொண்டு வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொடுக்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது. -(3)