நல்லதை யாரும் கண்டுக்கல-ஆர்யா ஓபன் டாக்
எப்போதும் ஜாலியான மனிதராக வலம் வருபவர் ஆர்யா. இவர் எப்போதும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் இவர் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் தற்போது இவர் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய அமீரின் சந்தனத்தேவன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இவர், நான் விளையாட்டாக போட்ட டிவிட் மட்டுமே அனைவரும் விமர்சித்தனர்.
ஆனால் அதற்கு முன்னும், பின்னும் நான் ஆதரவாக போட்ட டிவிட்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. பரவாயில்லை, எனக்கு நான் யார் என்று தெரியும் என்றார்.
N5




