செய்திகள்
ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் குதிக்க திட்டம் : இன்று நள்ளிரவு முதல் நடக்கும்?
இன்று (17) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில் சாரதிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
சம்பள விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுமாகவிருந்தால் நள்ளிரவு முதல் நாடுபூராகவும் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




