செய்திகள்

ரயில்வே வேலை நிறுத்தம் நடக்காது

இன்று 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகளினால் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் தமது கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டதையடுத்தே இந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)