எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது
உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிசினால் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் எல்லை நிர்ணய குழுவின் சகல உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அந்த அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த அறிக்கையை ஆராய்ந்து இம்மாதத்திற்குள் அதனை வர்த்தமானியூடாக அறிவிக்க நடவடிக்கையெடுப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். -(3)




