ஓரின சேர்க்கை திருமாண யோசனையால் சூடான அமைச்சரவை
ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் அதனை சட்டமாக்குவது தொடர்பான யோசனையால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் தொடர்பான செயல் திட்டங்களுக்கமைய முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் குறித்த விடயமும் காணப்படும் நிலையில் அது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்களுக்கிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு அங்கு சூடான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் பலர் குறித்த யோசனை நாட்டின் காலச்சாரத்திற்கு பாதிப்பாக அமையுமென தெரிவித்து எதிர்ப்புகள் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த யோசனையை திருத்தியமைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




