செய்திகள்
மகிந்த கூறிய 13+ஐ நாம் வழங்குவோம் : கிரியெல்ல
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்த முறைமையையே ஐக்கிய தேசிய கட்சி பின்பற்றும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ 13க்கும் அப்பாலான அதிகார பகிர்வையே வழங்குவதாக கூறியிருந்தார். அந்த முறையையே நாமும் பின்பற்றுவோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




