ரவிராஜின் மனைவின் மேன்முறையிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் சந்தேக நபர்கள் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு ஜூரி சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவியினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜாராகியிருக்கவில்லை. இந்நிலையில் பிரதிவாதி தரப்பிலிருந்து ஆஜராகியிருந்த சட்டத்தரணி மனுதாரர் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகாமையினால் அதனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் குறித்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் குழாமால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)




