ஜனாதிபதி கட்சி தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் : சுதந்திரக் கட்சி
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுல் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டுப்பட்டே ஆகவேண்டுமென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நிறைவேற்று ஜனாதிபதி முறையை அவ்வாறே பேணுவதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக கட்சியினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் எதுவாகவிருந்தாலும் அதற்கு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் கட்டுப்பட்டே ஆகவேண்டுமெனவும் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் நிறைவேற்று அதிகாரத்தை அவ்வாறே வைத்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் எவ்வாறாயினும் அது தொடர்பாக கட்சியின் செயற்குழுவிலேயே தீர்மானிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




