தாய் வெளிநாட்டில்: வவுனியாவில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் தூக்கில் மாட்டிய பரிதாபம்!
வவுனியா, பாரதிபுரம், ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் விளையாட்டிற்கு மரத்தில் கயிறுனைப் போட்டு கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் இருவரின் கழுத்தில் கயிறு இறுக்கி கழுத்தில் காயங்களுடன் அயலவர்களின் உதவியுடன் நேற்று (19.01) மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பாரதிபுரம், ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் குறித்த சகோதரர்கள் இருவரினதும் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்னாக பணியாற்றி வருகின்றார். தந்தை கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இரு சகோதர சிறுவர்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்கள்.
மாலை இருவரும் மரத்திற்கு கயிறுபோட்டு அதனை தமது கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் கயிறு கழுத்துப் பகுதியில் இறுகி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுவர்கள் இருவர்களின் கூக்குரலினையடுத்து அயலில் உள்ளவர்கள் சென்று இருவரையும் மீட்டனர்.
12 மற்றும் 13வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபரீதத்தினை எதிர்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
N5





