செய்திகள்

காதலியை அச்சுறுத்த வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவன்

தனது காதலியை அச்சுறுத்தும் நோக்கில் பாடசாலையில் வகுப்பறைக்குள் மாணவனொருவன் தூக்கில் தொங்கிய சம்பவமொன்று சீகிரிய பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
உயர்தர வகுப்பில் கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு செய்துள்ளதாகவும் அவன் மற்றைய மாணவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் கற்கும் மாணவியொருவரையே அந்த மாணவன் காதலித்துள்ளதாகவும் இதன்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையொன்றையடுத்து பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது வகுப்பறையில் தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)