தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ள எதிக்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தீர்வு விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாது.இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழரசுக்கட்சி ஆரம்;பிக்கப்பட்டு அதன் கொள்கைகள் பரப்பட்டப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஓரு ஒற்றுமையேற்பட்டது.காரியப்பர் தமிழரசுக்கட்சி ஊடாக கல்முனையில் தெரிவுசெய்யப்பட்டார்.பொத்துவில் தொகுதியில் முஸ்தபா தெரிவுசெய்யப்பட்டார்.மூதூர் தொகுதியில் முகம்மது அலி தெரிவுசெய்யப்பட்டார்.
அன்றைய காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஓரு தீர்வு கிடைத்திருக்குமாகவிருந்தால் தமிழரசுக்கட்சியில் முஸ்லிம் தலைவர்கள் இருந்திருப்பார்கள்.தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்திலேயே அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துசெல்லும் நிலையேற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளவேண்டும்.இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் மிக முக்கிய பங்காளிகளாக மட்டக்களப்பு மக்கள் இருந்துள்ளனர்.தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம் என நான் கருகின்றேன்.யாழ் மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழ் மக்கள் அதிகமாக வாழ்வது மட்டக்களப்பு மாவட்டத்திலாகும்.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் கடுமையான முறையில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு காரணம் வேறு மாவட்டங்களில் இருந்து திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் மற்றும் தமிழ் மக்களின் இடம்பெயர்வு போன்ற காரணத்தினால் தமிழர்களி; வீதசாரம் குறைந்துள்ளது.அதேநேரத்தில் சில இனங்களின் வீதாசாரம் அதிகரித்துள்ளது.இதனை ஓரளவு நாங்கள் நிவர்த்திசெய்யவேண்டுமானால் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவது அவசியம்.எங்கள் மத்தியில் பாரிய கருத்துவேறுபாடுகளுக்கு இடமில்லை.ஒற்றுமையே எமக்கு பலம்.சில ஒற்றுமையினம் காரணமாக சில பாதிப்புகளை நாங்கள் எதிர்கொண்டுவருகின்றோம்.
நாங்கள் மிக முக்கியமான,பல சர்ச்சைகளை எதிர்கொள்ளுகின்ற காலத்தில் இருக்கின்றோம்.இந்த நாட்டின் அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த 70வருடமாக பேசப்பட்டுவருகின்றது.பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆனால் அதுவரையில் நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை.தற்போது அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.அந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் இழக்ககூடாது.இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் முழுமையாக பயன்படுத்தவேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு சில கொள்கையினை வகுத்துள்ளது.அதில் இருந்து நாங்கள் விலகமுடியாது.அந்த கொள்கையின் அடிப்படையில் எமக்கு கிடைக்கும் அரசியல் தீர்வு அந்த கொள்கையினை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் என்னன்ன விடயங்களை உள்ளடக்கவேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.அந்த கொள்கையினை அடைவதற்கு அதன் அடிப்படையில் தீர்வினைப்பெறுவதற்கு என்ன விடயங்களை உள்வாங்கவேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
1947ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு தமிழ் மக்கள் விரும்பத்தக்க ஆட்சி முறையாக இல்லாவிட்டாலும் கூட பாதகமான விடயம் எதுவும் இருக்கவில்லை.1972ஆம் ஆண்டு இந்த நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கினார்கள்.பண்டாரநாயக்கவின் காலப்பகுதியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த காரணத்தினால் அதனைப்பயன்படுத்தி அரசியல் சாசனத்தை உருவாக்கினார்கள்.அந்தவேளையில் தமிழ் தலைவர்களும் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையலான முன்னெடுப்புகளை மேற்கொண்டனர்.
சமஸ்டி கேட்டார்கள்,சுயாட்சி கேட்டார்கள்,பிராந்திய சுயாட்சி கேட்டார்கள்,எதுவுமு; வழங்கப்படவில்லை.அதன் காரணமாக தந்தை செல்வா அவர்கள் தனது பதவியை துறந்து தேர்தலில் வெற்றிபெற்று அரசியல்சாசனத்தை நிராகரிக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தினார்.அதன் பின்னர் 1978ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட்டது.அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆறுக்கு ஐந்து பெரும்பான்மை இருந்தது தாங்கள் விரும்பியவாறு அரசியல்சாசனம் ஒன்றை உருவாக்கினர்.
இந்த இரண்டு அரசியல்சாசனங்கள் மூலம் ஒற்றையாட்சி என்ற பதம் கொண்டுவரப்பட்டது.சிங்கள மொழிக்கு தனி அங்கீகாரம் வழங்கப்பட்டது.பௌத்த சமயத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது.அதிகாரப்பகிர்வோ,சுயாட்சியோ அன்று உருவாக்கப்படவில்லை.முழுமையாக ஒற்றையாட்சி முறையில் இருந்தது.இந்த சரித்திரத்தை புரிந்துகொள்வது அவசியம் என நான் நினைக்கின்றேன்.
தற்போதுள்ள நிலைமையினையும் எதிர்காலத்தில் வரவுள்ள நிலையினையும் பார்க்கும்போது கடந்த கால நிலைமைகள் தொடர்பில் அறிந்திருக்கவேண்டியது அவசியமாகும்.
1983ஆம் ஆண்டு இனக்கல்வரத்திற்கு பின்னர் இந்தியாவின் முயற்சியினால் புதிய அரசியல் யாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதன்காரணமாக இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.அதனடிப்படையில் இலங்கை அரசாங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் இணைந்து 13வது அரசிலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்பட்டது.
வடகிழக்கில் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்துவந்துள்ளனர்.அந்த அடிப்படையில் அந்த இரண்டு பிராந்தியங்களும் இணைக்கப்படலாம்.அதன் இறுதி முடிவு சர்வஜனவாக்கெடுப்பில் தங்கியிருக்கும்.இந்த அடிப்படையிலேயே 13வது அரசியல்சாசன திpருத்தம் உருவாக்கப்பட்டது.எனினும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை.அதில் பல குறைகள் இருக்கின்றன என இந்திய பிரதமரிடம் சுட்டிக்காட்டி நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் நாங்கள் பங்குபற்றவில்லை.
அதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் இந்திய அரசாங்கத்திற்கு சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்ற காரணத்தினால் அந்த விடயங்கள் நடைபெறவில்லை.13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பல ஜனாதிபதிகளின் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரேமதாசவின் காலப்பகுதியில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.இந்தியாவில் உள்ள அதிகாரப்பகிர்வுபோன்று நடைபெறவேண்டும்,வடகிழக்கு இணைக்கப்படாமல் இருந்தாலும் கூட வடகிழக்கு இணைந்த ஒழுங்கு இருக்கவேண்டும் என அந்த தெரிவுக்குழு சிபார்சு செய்தது.அது நிறைவேற்றப்படவில்லை.சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.இந்திய முறைக்கு அப்பால் சென்று வழங்க தீர்மானித்தபோதிலும் பாராளுமன்றத்தில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை.அதனால் அது நிறைவேற்றப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்க காலத்தில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்க்ள செய்யப்பட்டன.உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வினை பெறுவது தொடர்பில் பரிசிலிக்கப்பட்டது.டோக்கியோவில் அது உர்ஜிதப்படுத்தப்பட்டது.
உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசத்தில் ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வினை பெறவைப்பது.அது நிறைவேறவில்லை.விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஆயுதப்போர் ஆரம்பித்துவிட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியில் சர்வ கட்சி குழுவினை நியமித்து நிபுணர் குழுவினை நியமித்து இரண்டு குழுக்களும் தங்களது சிபார்சுகளை முன்வைத்தனர்.அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
2015ஆம்ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.தற்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.இது ஆறாவது முயற்சியாகும்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டும் என பகிரங்கமாக கூறியுள்ளார்.இந்த நாடு முன்னேற்றமடையவேண்டுமானால் இந்த நாட்டின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என அவர் பகிரங்கமாக கூறுகின்றார்.
பாராளுமன்றம் அரசியல்சாசன சபையாக மாற்றப்படவிருக்கின்றது.உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.பல சர்ச்சைகளும் உள்ளன.அதனை பல்வேறு உறுப்பினர்கள் கிளப்பியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அணியை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
காணிகள் ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.முழுமையாக விடுவிக்கப்படவில்லை.அரசியல் கைதிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.காணாமல்போனவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அது இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.
ஜெனிவாவில் இலங்கை விவகாரம் பங்குனிமாதம் விவாதிக்கப்படும்.பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன.அதனையாரும் மறுக்கமுடியாது.அதேசமயம் ஓரளவுக்கு எமது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.காணாமல்போவோம் என்ற அச்சம் எங்களிடம் இல்லை.வெள்ளைவான் அச்சம் தற்போது இல்லை.பழைய நிலைமை மாறியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதுமாத்திரம் எங்களுக்கு ஒரு தீர்வு அல்ல.அரசியல்சாசன ரீதியாக ஒரு தீர்வு வரவேண்டும்.அதனைப்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.ஐக்கிய தேசிய கட்சி,சுதந்திரக்கட்சி,தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து பாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் ஒரு தீர்வினை நிறைவேற்றமுடியும்.அதற்குரிய பெரும்பான்மையுள்ளது.
எதனையும் தரவில்லையென்று நாங்கள் எழுந்தமானமாக நடக்கமுடியாது.இலங்கை அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டுள்ளது.அரசாங்கத்திற்கு அதிகளவான அழுத்தங்களை வழங்கி ஒரு அரசியல் தீர்வினை வழங்கவேண்டுமா இல்லையா என்பதை நாங்கள் தீர்மானிக்கவேண்டும்.
எங்கள் மீது திணிக்கப்படும் அநீதி,புறக்கணிப்பு மாறவேண்டுமானால் ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளுக்கு வரவேண்டும்.எங்கள் இறமையின் அடிப்படையில் அந்த அதிகாரங்களை பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகவேண்டும்.அந்தந்த பகுதி மக்கள் அவர்களின் இறமைகளின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்தவேண்டும்.
காணி.சட்டம் ஒழுங்கு,கல்வி,சுகாதாரம்,விவசாயம்,நீர்பாசனம்,கடற்தொழில்.கைத்தொழல் போக்குவரத்து,கலாசார விடயங்கள்,சமய விடயங்கள்,நிதியொதுக்கீடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும்.இதனைப்பெறுவதற்கே நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.அந்த முயற்சியை கைவிடமுடியாது.இறுதி தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடைய தீர்வாக அமையவேண்டும்.அதில் கருத்துவேறுபாடுகளுக்கு இடமில்லை.ஒற்றையாட்சி என்கின்றார்கள்,சமஸ்டி என்கின்றார்கள்.நாங்கள் கோசங்களை நம்பவில்லை.கோசங்களின் அடிப்படையில் தீர்வுகாணமுற்படவில்லை.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் வாய்ப்பு பாராளுமன்றத்தில் இருப்பதன் காரணமாக அதனைப்பயன்படுத்தி ஒரு அரசியல் தீர்வினைப்பெறுவதற்கு நாங்கள் முயற்சிக்கவேண்டும்.அது எங்களுக:கு அத்தியாவசியமான தேவை.இதுவே எமது நிலைப்பாடு இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அரசியல் தீர்வினைப்பொறுத்தவரையில் நியாயமான,நீதியான தீர்வு எமக்கு கிடைக்காது என்ற முடிவினை நிதானமானமுறையில் எடுக்கும் வரையில் அந்த தீர்வினை நோக்கி பயணிக்கவேண்டியது எமது கடமை.அதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்துவருகின்றது.
ஆனால் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை மக்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.அதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.நாங்கள் கவனமாக,நிதானமாக செயற்படவேண்டும்.
தீர்வு இல்லாமல் இருக்குமானால் எங்களுடைய பாதிப்புகள் தொடரும்.தீர்வு ஒன்றுவருமானால் எமது பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்படும்.தீர்வு விடயத்தில் நாங்கள் அவசரப்பட்டு.ஒரு முடிவினை எடுக்கமுடியாது.இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும்.அவசரப்பட்டு நாங்கள் முடிவுகளை எடுக்கமுடியாது.கோசங்களின் அடிப்படையில் நாங்கள் செயற்படமுடியாது.
எமது மக்களி; தேவைகளை புரிந்து.எமது மக்களின் தற்போதைய நிலைமைகளை புரிந்து அதில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு அரசியல்தீர்வு அத்தியாவசியமாக இருக்குமானால் எமது மக்களி;ன் இறமையின் அடிப்படையில் அதனைப்பயன்படுத்தும் தீர்வு வருமானால் அதனை நோக்கி நாங்கள் செல்லவேண்டும்.
n10




