செய்திகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கு! நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த இளைஞர்கள் குழுக்கள் தீர்மானித்துள்ளன.
இந்த பேரணியை வெள்ளவத்தையிலிருந்து காலி முகத்திடல் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குமாறு கோரி தொடர்ச்சியாக அங்கு இளைஞர்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களினூடாக இளைஞர்களை ஒன்றிணைத்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. -(3)