ஜல்லிக்கட்டுக்காக நடிகர்களும் போராட்ட களத்தில்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நடிகர்களும் இன்று போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி சென்னையில் தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
இன்று காலை 8 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதி வழியில் மவுனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இப்போராட்டத்தில் ரஜினி , அஜித் , சூர்யா , பிரவு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். -(3)





