இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்
இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்ப்பார்க்க முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு , வட மத்திய , கிழக்கு , மத்தி , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இந்த மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் அத்துடன் சில பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய கால நிலை நிலவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




