நூதன திருட்டில் சிக்கிய ரஜினி, கமல் ஹீரோயின்
தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களான ரஜினிகாந்த், கமலுடன் பல நடிகைகள் நடித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புதியவார்ப்புகள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரதி.
இவர் ரஜினி, கமலுடன் உல்லாச பறவைகள், நிறம் மாறாத பூங்கள், கழுகு, முரட்டுக்காளை என பல படங்களில் நடித்துள்ளார்.
பின் ரதி அக்னிகோத்ரியாக பாலிவுட்டில் நடித்து வந்தவர் தொழில் அதிபர் அணில் விர்வானியை திருமணம் செய்துகொண்டு மும்பையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது அவர் தன் வீட்டில் நூதனமுறையில் மின்சாரம் திருடுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் அவர் வீட்டை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்நடிகை தனது வீட்டில் மீட்டர்களை இயங்க செய்யாமலாமலே 3 ஆண்டுகள் மின்சாரத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அவரால் அரசுக்கு 49 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
N5




