காணமல் போனவர்கள் தொடர்பாக பிரதமர் வெளியிட்ட தகவல்
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களில் பலர் உயிருடன் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்ளத்திடமுள்ள அறிக்கையொன்றை அடிப்படையாக கொண்டே தான் இந்த கருத்தை கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜே.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தெரிந்த விடயங்களை பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். நான் பொலிஸாரிடம் கேட்ட போது காணமல் போனவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடையாது எனவும் இலங்கையில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லையெனவும் தெரிவித்துள்ளனர். சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்றார்களா எனவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சந்தேகிக்கும் வகையில் காணமல் போனவர்களில் பலர் உயிருடன் இல்லை. எவ்வாறாயினும் காணமல் போனவர்கள் தொடர்பாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




