செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்
கொழும்பு மெகசின் சிறைச்சாலை மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை முதல் இவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களை கண்டறியுமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி மெகசின் சிறைச்சாலையில் 60 கைதிகளும் அநுராதபுரத்தில் 19 கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.-(3)




