இந்திய தூதுவர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் சம்பிரதாயபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் இந்திய இல்ல த்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியத் தூதுவர் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியமை இதுவே முதல்முறையாகும்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து கடந்த 24ஆம் பதவிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது-(3)




