மகிந்தவிடம் ரணில் கேட்ட கேள்வி
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தான் எண்ணியிருந்தால் ஏன் மகிந்த ராஜபக்ஷ 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்காண்டு மீண்டும் போட்டியிட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருப்பேன் எனவும் ஆனால் தான் மீண்டும் வர மைத்திரியே காரணமெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நுகேகொட கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் அனுராதபுரம் பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவினாலேயே தான் போட்டியிட காரணமெனவும் இல்லையென்றால் ஓய்வு பெற்றிருப்பேன் எனவும் மகிந்த கூறியுள்ளார். மற்றைய ஜனாதிபதிகள் இரண்டு தடவை போட்டியிட்டு ஓய்வு பெற்றுவிடுவர். ஆனால் இவரோ 18ஆவது திருத்தத்தை மேற்கொண்டு மீண்டும் போட்டிக்கு வந்தார். தான் ஓய்வு பெற எண்ணியிருந்தால் எதற்கு அந்த திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




