செய்திகள்

புதிய தேசிய பாதுகாப்பு சட்ட வரைபு மார்ச்சில் பாராளுமன்றம் வரும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலான  தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்ட வரைபை  எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த காலந்துரையாடலின் போது புதிய சட்டத்தின் வரைபை மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)