செய்திகள்

ஜனாதிபதியின் அதிகாரங்கள் இதற்கு மேல் குறைக்கப்படக் கூடாது

ஜனாதிபதியிடம் தற்போதுள்ள அதிகாரங்கள் அவ்வாறே தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதாக அந்தக் கட்சியின் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு மூலம் ஏற்கனவே அவரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. இனியும் குறைக்கத் தேவையில்லையென்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)