கொழும்பில் துறைமுக ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது தாக்குதல்
துறைமுக ஊழியர்கள் சங்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் கண்ணீர்புகை மற்றும் நீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துறைமுகங்களை தனியாருக்கு விற்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.
புறகோட்டை பகுதியிலிருந்து காலி முகத்திடல் பக்கமாக சென்றபோது செரமிக் சந்தியில் வைத்து பொலிஸாரினால் மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஜே.வி.பியின் தொழிற்சங்கங்களே ஏற்படு செய்திருந்தன. -(3)




