செய்திகள்

அரசாங்கத்திற்கு அரச மருத்துவர்கள் சங்கத்தினால் ஒரு வார கால அவகாசம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக சரியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் முறையான தீர்மானத்தை மேற்கொள்ளாவிட்டால் அதிரடி திர்மானங்களை தாங்கள் எடுக்க நேரிடுமென அந்த சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)