தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது : விபரங்கள் அடங்கிய வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்
அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்கிறது. அதில் மக்களுக்கு மறைக்க வேண்டிய விடயங்கள் எதுவும் கிடையாதென்று சுட்டிக்காட்டினார். இதேவேளை இது தொடர்பான விபரங்கள் அடங்கிய வர்த்மானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். -(3)




