செய்திகள்

வனாத்தே குடு ரொஷான் வெட்டிக் கொலை

”வனாத்தே குடு ரொசன்” என்றழைக்கப்படும் பிரபல போதைப் பொருள் வியாபாரியான சாமர சந்தருவான் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பகுதியில் அவர் இன்று காலை இனந்தெரியாத குழுவொன்றினால் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகலால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். -(3)