செய்திகள்

4 மாதங்களாக கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு

உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் யேமன் நாட்டில் 4 மாதங்களுக்கு அதிகமாக கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களை காப்பாற்ற முடிந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அரசாங்கம், ஓமான் தூதரகத்தின் ஊடாக இந்த இலங்கையர்களை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதும், யேமனில் நிலவிய உள்நாட்டு போரின் காரணமாக அது முடியாமல் போனது.
டுபாய் நாட்டுக்கு சொந்தமான இந்த கப்பல் ஓமானில் இருந்து எரிபொருளை ஏற்றியவாறு யேமன் சென்றுள்ள நிலையில், அந் நாட்டு அதிகாரிகள், உரிய அளவு எரிபொருள் கப்பலில் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்படி அந்த கப்பலுக்கு யேமனில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அந்த துறைமுகம் அமைந்துள்ள பிரதேசம் யேமன் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. -(3)