செய்திகள்

மகிந்த அரசாங்கத்தின் திருடர்களை தேட முன்னர் இந்த அரசாங்கத்தின் திருட்டை தடுக்க வேண்டும் : சந்திரிகா

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு முதல் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் திருட்டுக்களை நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அத்தனகல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் ஊழல்களை நிறுத்த வேண்டும். என்று அவர் அங்கு தெரிவித்துள்ளார். -(3)