3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் படம்
மலையாள பட உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, மரிகர் ஆர்ட்ஸ். இந்த பட நிறுவனம் முதல் முறையாக ஒரு தமிழ் படம் தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஹாஷிம் மரிகர் டைரக்டு செய்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தம்பி மகன் மக்பூல் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சில மலையாள படங்களில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஹேட் ஸ்டோரி’ என்ற படத்தின் கதாநாயகி பவுளி டாம், பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனச்சா மற்றும் சாக்ஷி திவேதி ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
மிக முக்கிய வேடத்தில் ரியாஸ்கான் நடிக்கிறார். சஜித் மேனன் ஒளிப்பதிவு செய்ய, மன்சூர் அஹமத் இசையமைக்கிறார். சுஹாளி சாய்க் மாதர், ஷாஜி ஆலப்பட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.




