சைற்றம் அதிகாரியின் வாகனம் மீதான துப்பாக்கி சூடு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள்
மாலபே சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த அதிகாரி அந்த வாகனத்தில் இருந்ததாகவும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவுமே தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அந்த காரின் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ள இடங்களை பரிசோதித்தவர்கள் அந்த துப்பாக்கி சூட்டு ஓட்டைகளை பார்க்கும் போது அந்த வாகனத்தில் குறித்த அதிகாரி இருந்திருந்தால் நிச்சயமாக அவரின் தலையில் சூடுபட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். சூட்டு சம்பவத்தின் பின்னர் பரிசோதனை அதிகாரிகள் அந்த காரின் சாரதி பக்க கதவை திறந்தபோது உள்ளே இருந்து கண்ணாடி துகள்கள் கீழே கொட்டியுள்ளன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குறித்த அதிகாரி சம்பவத்தின் போது அணிந்திருந்த ஆடைகளை பரிசோதிப்பதற்கு இரசாயணபகுப்பாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர். -(3)




