ஆளுநருடன், முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு; மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு
மும்பையில் இருந்து சென்னை ராஜ்பவன் திரும்பிய ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து கிளம்பிய ஓ.பி.எஸ், ராஜ்பவன் சென்றடைந்தார். அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்றுள்ளனர். ஆளுநருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முழு விவரங்கள் தெரிய வரும்.
இதனிடையே, பிரதமர் மோடியை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில், மோடியை சந்தித்து உரையாடியுள்ளார் தம்பிதுரை. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்றுடன் முடிகிறது. இதையொட்டிதான், தம்பிதுரை, மோடியை சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, இதில் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
n10




