செய்திகள்

விக்ரமுக்கு வில்லனாக பிரபல இயக்குனர்?

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசரே வெளியாகிவிட்டது, ஆனால் படத்தில் யார்யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. டீஸர் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான R.பார்த்திபன் தான் துருவ நட்சத்திரம் படத்தின் மெயின் வில்லன் என தகவல் கசிந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறதாம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N5