செய்திகள்

மாகாண சபைகளிடமிருந்து பரிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும்

திவிநெகும சட்டம் மூலம் மாகாண சபைகளிடமிருந்து கடந்த ஆட்சிக்காலத்தில் பரிக்கப்பட்ட அதிகாரங்களை மீள கையளிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
திவிநெகும திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திவிநெகும சட்டத்தின் ஊடாக இவை முன்னைய அரசாங்கத்தினால் பரிக்கப்பட்டன.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் தற்பொழுது கலந்துலையாடப்படுகின்றன. ஆனால், கடந்த ஆட்சியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பிரயோகித்து மாகாணசபைகள் பலவீனப்படுத்தப்பட்டன என்றும் அவர் குற்றஞ் சாட்டினார்.
நாட்டின் நலனுக்காக அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்துகின்றோம் என்று தெரிவித்து எதிரணியிலிருந்து உறுப்பினர்களை முன்னைய ஆட்சியானர்கள் தம்முடன் இணைத்துக்கொண்டனர்.அதன் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரங்களையே அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார். -(3)