செய்திகள்

ஹல்துமுல்லை பதுலுதென்னவில் முழு கிராமமும் நோயால் பாதிப்பு

ஹல்துமுல்ல பகுதியில் பதுலுதென்னவில் கிராமமொன்றில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் நோய் தொற்றுகளுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் காய்ச்சல் , இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இது அடிப்படை வசதிகள் அற்ற பின்தங்கிய கிராமம் என்பதனால் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லாது இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஹல்துமுல்ல சுகதார அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று அவர்களை பலாங்கொடை மற்றும் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்றே இருப்பதாக மருத்துவ பரிசேதனைகள் தெரிவிக்கின்றன.
குறித்த கிராமம் பிரதான வீதியிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளடதுடன் பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)