செய்திகள்
நட்பு , பணம் , அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியும் காலம் முடிந்தது : பொலிஸ் மா அதிபர்
நட்பு , பணம் மற்றும் அரசியல் அலுத்தங்களுக்கு அடிபணிந்து பொலிஸார் பணியாற்றிய காலம் முடிவடைந்துவிட்டதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இமதுவவில் புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலஞ்சம் மற்றும் வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தான் ஒருபோதும் மன்னிப்பு வழங்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




