டபுள் ஆக்ஷனில் சொதப்பிய படங்கள்
தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் ஓர் ஆசை என்றால் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான். அண்ணன், தம்பி சிறு வயதிலேயே பிரிந்து சென்று விடுவார்கள், ஒரு கட்டத்தில் அவர் இடத்திற்கு இவரும், இவர் இடத்திற்கு அவரும் சென்று ஆடும் ஆடுபுலி ஆட்டம் பெரும்பாலும் இரட்டை வேட படங்களில் டெம்ப்ளைட் கதைகளாக இருக்கும்.
மேலும், இதுமட்டுமின்றி ஒருவர் ஹீரோ, மற்றொருவர் வில்லன் எனவும் சமீப காலமாக படங்கள் எடுத்து வருகின்றனர். இதில் இரட்டை வேடம் என்றாலே பெரும்பாலும் ஹிட் படங்களை கொடுத்தது ரஜினி, கமல் தான்.
ஆனால், அவர்களுமே சில இடங்களில் தடுமாறினார்கள், அதிலும் ரஜினி நடிப்பில் வந்த லிங்கா படுதோல்வியடைந்தது, எப்போதும் போல் அப்பா ஊருக்கே நல்லது செய்வார், பிறகு ஏமாற்றப்பட்டு கஷ்டப்படுவார், மகன் அப்பாவின் புகழை நிலைநாட்டுவார் என்ற பழைய கதை இந்த முறை ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்றியது.
கமல்ஹாசனுக்கு இரட்டை வேடம் எல்லாம் சுவிங்கம் சாப்பிட்டு துப்புவது போல், அசால்ட்டாக ஸ்கோர் செய்பவர், ஆனால், அவருமே ஆளவந்தான் படத்தில் சறுக்கினார், மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது.
அஜித் எப்போது தன்னை தோல்வி சூழ்ந்தாலும் உடனே ஒரு டபுள் ஆக்ஷன் கதையை தான் தேர்ந்தெடுப்பார், அப்படித்தான் வாலி, வில்லன், அட்டகாசம், பில்லா என இரட்டை வேடங்களில் ஹிட் கொடுத்தாலும் அசல் படத்தில் இந்த செண்டிமெண்ட் உடைந்தது.
விஜய்க்கு இரட்டை வேடங்களுக்குமே எப்போதும் ராசியில்லை, கத்தி படத்தை தவிர இவர் நடித்த இரட்டை வேடங்கள் கொண்ட படமான அழகிய தமிழ் மகன், வில்லும், புலி என அனைத்தும் படுதோல்வியே.
சூர்யாவிற்கு இந்த இரட்டை வேட படங்கள் ராசி தான், வாரணம் ஆயிரம், வேல், பேரழகன், 7ம் அறிவு என தொடர் வெற்றிகளை கொடுத்தவர் மாற்றான் படத்தில் சறுக்கினார். ஜெயம் ரவிக்கு நிமிரந்த நில், ஆதிபகாவன் என்ற இரண்டு இரட்டை வேட படங்களும் தோல்வியை தான் கொடுத்தது. சிம்பு மன்மதனில் பெரும் வெற்றியை பெற்றாலும் சிலம்பாட்டத்தில் தோல்வியைடைந்தார்.
மேலும் தனுஷ் கொடி, விக்ரம் இருமுகன் என ஒரு இரட்டை வேடம் படம் கொடுத்து இவர்கள் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளனர், அடுத்து வரும் இவர்களின் இரட்டை வேட படங்கள் இந்த பெயரை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




