பகிடிவதையில் ஈடுபட்ட 15 பல்கலை மாணவர்கள் கைது
பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக கூறப்படும் 15 மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மெகொட – களுகமுவ பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பகிடிவதை புரியப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறையிடப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரையும் இன்று அதிகாலை 2.15 அளவில் கைது செய்தனர்.
இதனிடையே, பகிடிவதைக்கு உள்ளான முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. -(3)




