செய்திகள்

எதிர்ப்பு!

இவர்கள் எமது
இரத்த உறவுகள்
கேட்பது பிரிவினை அல்ல
வாழ்வு உரிமையை !
வாழவைத்த …
நிலத்தின் உரிமையை !

வலி சுமந்து…..
போர் தந்த
வடு சுமந்து….
இடம்பெயர்ந்து …
இன்னலுற்று
இனி தமது துயருக்கு
முடிவொன்று
வேண்டுமென்ற
திடம் கொண்டு …..

அடங்காப்பற்றில்
ஆண்டாண்டாய் …
வாழ்ந்த மண்ணில்
ஒடுங்க இடம்வேண்டி …
நடுங்கும் குளிரிலும்
எரிக்கும் வெயிலிலும்
முடங்கிக் கிடந்தது
ஓர்மத்துடன் போராடுவது;

அடக்குமுறை ஒன்று அவர்களின்
அடுத்த தலைமுறைக்கும்
சேராதிருக்கட்டுமென்று !
இவர்கள் கேட்பதெல்லாம்
பறித்தெடுக்கப்பட்ட உரிமையை
உயிரினும் மேலான…
நிலஉடைமையை
மீள ஒப்படைக்கும்படி !

ஏனெனில் …..
இவர்களின் பின்னர்
இவர்களது விதைகள்
முளைத்து விருட்சங்களாவது
இம் மண்ணில்தான் என்பதனால் !!!

                                                           -பிறேமலதா பஞ்சாட்சரம்