செய்திகள்

பழைய முறையிலேயே உள்ளுராட்சி தேர்தல் நடத்த வேண்டும் : சிறுபான்மை கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை

பழைய முறையிலேயே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு சிறுபான்மை கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளன.
புதிய முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் புதிய முறையில் நடத்தினால் உறுப்பினர்கள் எண்ணிக்கியை தற்போதுள்ள எண்ணிக்கையிலும் பார்க்க பாரியளவில் அதிகரிக்கும் எனவும் அத்துடன் சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுமெனவும் இதனால் பழைய முறையில் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்துமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றம் , உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் என மூன்றுக்கும் ஒரே முறைமையை பின்பற்றியதாக தேர்தல் இருக்க வேண்டுமெனவும் இதனை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று சிறுபான்மை கட்சிகள் பிரதமரை சந்தித்தபோதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். -(3)