11 வருடங்களின் பின் ரயில் நேர அட்டவணையில் மாற்றம் : அடுத்த மாதம் முதல் அமுல்
ரயில் போக்குவரத்து நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் புதிய நேர அட்டவணையின் முதல் அச்சுப் பிரதி தொடரூந்து பொது மேலாளரால் , போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றியமைக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய இந்த ரயில் நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவணை சேவையில் உள்ள ரயில் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மாதம் தொடக்கம் இதனை பிரதான ரயில் நிலையங்களில் பயணிகள் கொள்வனவு செய்யும் வகையிலான நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா புகையிரத அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். -(3)




