செய்திகள்
கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
படையினர் வசமுள்ள தமது காணிகளை தங்களிடம் வழங்குமாறு கோரி கேப்பாபிலவில் மக்களால் முன்னேடுத்து வரப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
சிவில் அமைக்கள் சில இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடத்தின.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர். -(3)





