கூட்டு ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்யப்போகிறோம் : தொண்டமான்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மறு பரீசீலனைக்கு உட்படுத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்தை தோட்ட நிர்வாகங்கள் பல மீறி செயற்பட்டு வரும் நிலையிலேயே தொழிலாளர் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்படி இது தொடர்பாக மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தையையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள காங்கிரஸ் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு தொழில் அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.-(3)




