செய்திகள்

பூமியைப்போல 7 கோள்கள் கண்டுபிடிப்பு: நீர் இருப்பதற்கும் உயிர்கள் வாழ்வதற்குமான வாய்ப்பு

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டு பிடிக்கும் மனிதனின் முயற்சியில் முதல் படி பூமியை  நட்சத்திரம் ஒன்றில் இருந்து அதிக தூரமும் இல்லாமல்  அண்மையிலும் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய கோள் ஒன்றை கண்டுபிடிப்பதுதான்.
இந்த அடிப்படையில் இன்று புதன்கிழமை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் பூமியைப் போன்ற 7 கோள்களை அவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
பூமியை போல ஒத்த தன்மை உள்ள பல கோள்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை ஆகும்.

இந்த 7 கோள்கள் நீரை கொண்டிருக்கக் கூடும் என்றும் அவற்றின் தரையில் உயிர்கள் வாழக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

இவற்றுள் மூன்று கோள்களில் அநேகமாக நீர் இருக்கலாம் என்றும் அவற்றுள்ளும் ஒரு கோளில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறியும் முயற்சியில் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
planetary-system-exlarge-169
6_b_01