செய்திகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகள் சுழற்சி முறையிலான உண்வு தவிர்ப்பு போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகள் இன்று முதல் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்பாக ஏ9 வீதியின் ஓரமாக தமது போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காhமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற வழிபாடுகளை அடுத்து நகர் வீதி வழியாக ஊர்வலமாக வருகை தந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 10 பேருடன் மாக்சிச லெனின் கட்சியைச் சேர்ந்த வி.பிரதீபன், ஈபிஆர்எல்எப் மத்திய குழு உறுப்பினர் மேழிக்குமரன் உள்ளிட்டவர்களும் இதல் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தமது கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

IMG_4632 IMG_4640

N5