செய்திகள்

இன்று முதல் மழை ஆரம்பம் : வறட்சி நீங்கும்

இன்று 25ஆம் திகதி மாலை முதல் மாகாணங்கள் பலவற்றில் மழையுடன் கூடிய கால நிலையை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்படி மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனுடன் தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகம் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. -(3)