செய்திகள்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் 28 ஆவது நாளாகவும் புதுக்குடியிருப்பு மக்கையின்போராட்டம் 25 ஆவது நாளாகவும் தொடர்கிறது

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் இன்று போராட்டம் 28 ஆவது நாளாக தீர்வு எதுவும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது.

இறுதி யுத்தத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த கேப்பாப்புலவு மக்கள், 2012 ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் குடியமர்ந்தனர்.

இந்த மாதிரி கிராமத்தில் மலசலகூட வசதி உட்பட அடிப்படை வசதிகள் போதியளவு இன்மையால் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில், பெற்றோர்கள் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால், பிலவுக்குடியிருப்பு மாணவர்களும் பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையால் நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. .

இன்றைய தினம் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குநரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் சென்று சந்தித்துள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்தைந்தாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

2 3