சிறைச்சாலை பஸ் மீதான சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸாரை நோக்கி விரல் நீட்டப்படுகின்றது
சிறைச்சாலைகள் பஸ் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது பொலிஸார் அவர்களுக்கு முறையான பாதுகாப்புகளை வழங்கியிருந்தால் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பஸ்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரியிருந்த போதும் பொலிஸார் அதனை வழங்கியிருக்கவில்லையேன்றே தெரிகின்றது.
இந்த சம்பவத்தில் கைதிகள் 5 பேரும் சிறைச்சாலை அதிகாரிகள் 2 பேரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




