செய்திகள்

அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கும் மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி அரசாங்கத்தினால் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலைகளை விதித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில் இன்னும் பல வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கே அரிசி விற்பனையாகும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். -(3)